முதுகுளத்தூர் சங்க ராண்டி ஊரணி நுழைவு வாயிலில் குப்பைகள் கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு
முதுகுளத்தூர், செப்.9-
முதுகுளத்தூர் சங்கராண்டி ஊரணி நுழைவு வாயில் படித்துறையில் குப்பைகள் கொட்டப்படுவதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முதுகுளத்தூர் சங்கராண்டி ஊரணி இந்துக்களின் புனித ஊரணியாகும் .இங்கு ஆண்டாண்டு காலமாக இந்துக்கள் புனித சடங்குகள் செய்வதற்கு பொது மக்கள் கூடி புனித நீராடுகின்றனர். அந்த இடத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் தூர் நாற்றம் வீசுகிறது இதனால் இந்துக்களின் மனது புன்படுகிறது. பேரூராட்சி பணியாளர்கள் வீடு வீடாக குப்பைகள் சேகரித்து வருகின்றனர். அப்படிருந்தும் சிலர் ஊரணி வழைவு வாயிலில் குப்பை கொட்டுவதால் துர்நாற்றம் விசு கிறது. பொதுமக்கள் கூடுமிடத்தில் துர்நாற்றம் விசவதால் குப்பைகளை கொட்டக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளனர். கா.வினேந் குமார்