முதுகுளத்தூர் கடலாடி பகுதியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
முதுகுளத்தூர்,
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றக்கூடிய திமுக அரசை கண்டித்து தங்களது கைகளில் பலகைகளை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது என்னாச்சு!என்னாச்சு!தேர்தல் வாக்குறுதி என்னாச்சு என கோசங்கள் எழுப்பினர். கடலாடியில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கடலாடி ஒள்றிய அதிமுக செயலாளர் என்.கே.முனியசாமிபாண்டியன் தலைமை தாங்கினார். 

ஆர்ப்பாட்டத்தில் திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் பெட்ரோல் டீசல் விலையை குறைத்திட வேண்டும் குடும்பத்தலைவி மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இளைஞரணி செயலாளர் சத்தியமூர்த்தி, ஒன்றிய தொழில் நுட்பபிரிவு செயலாளர் பொன்னுப்பாண்டி,ஒன்றி இளைஞர் அணி செயலாளர் சரவணன், ஒன்றிய விவசாய அணிசெயலாளர் சண்முகபோஸ்,ஓரிவயல் கருப்பசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.முதுகுளத்தூரில் சேர்மன் தர்மர் தலைமையில் நடைப்பெற்றது. வினோத்குமார்