முதுகுளத்தூர் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு – புதிய நிர்வாகிகள் தேர்வு
இராமநாதபுரம், ஜுலை,3. முதுகுளத்தூர் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்புக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். 

முதுகுளத்தூர் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் தலைவரும் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு செயலாளருமான எஸ்டி. செந்தில் குமார் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் ஒன்றிய கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஆத்திகுளம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த நாயகி முத்துராமலிங்கம் தலைவராகவும், கீழக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் செயலாளராகவும் , நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் தங்கப்பாண்டியன் பொருளாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். சோமசுந்தரம்