முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்னா போராட்டம்
முதுகுளத்தூர்.செப்: 18
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். முதுகுளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாய் மற்றும் கண்களில் கருப்பு துணி கட்டி முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்
போராட்டத்திற்கு ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் எஸ்.டி.செந்தில்குமார் மூன்னிலை , ஒருங்கினைப்பாளர் செல்வநாயபுரம் பால்ச்சாமி, குமார குறிச்சி செந்தில்குமார், கீழக்குளம் ரவிச்சந்திரன் (செயலாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் ஆனந்தநாயகி தலைமை வகித்தார் குழந்தை தெரஸ்சிங்கராயர் ஒருங்கினைப்பாளர் மைக்கேல்பட்டணம் ஊராட்சி . உள்ளிருப்பு போராட்டத்தில் ஊ.ம .தலைவர்கள் காக்கூர் செயமணி ராஜா, விளங்குளத்தூர் கணகவள்ளி முத்துவேல், புழுதி குளம் ஊ. ம.தலைவர் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர். *கோஷம்* : பறிக்காதே பறிக்காதே ஊராட்சி தலைவர்களின் அதிகாரத்தை பறிக்காதே எனவும் எஸ் எப்சி வழங்கிடு எனவும், தலையிடாதே ஊரட்சி நிர்வாகத்தில் தலையிடாதே எனவும் கோஷமிட்டனர்.

வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள் அன்புக் கண்ணனிடம் கோரிக்கை மனுவை மாவட்ட செயலாளர் எஸ்.டி செந்தில்குமார் தலைமையில் மது கொடுத்தனர்.
*கோரிக்கை* = தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட நீர் வாக அனுமதி உத்தரவை உடனடியாக வழங்க வேண்டும் தனி அலுவலர் காலத்தில் உருவாக்கப்பட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனடியாக திரும்ப பெற வேண்டும் .
இந்த ஆண்டுக்கான என்ஆர்சி எஸ் வேலைக்கான நிர்வாக அனுமதியை பாரபட்சமின்றி அந்த அந்த ஊராட்சி தலைவருக்கே வழங்கப்பட வேண்டும் . ஊராட்சிக்கு வழங்கப்பட வேண்டிய எஸ்எப் சிநிதியினை அந்த அந்த ஊராட்சிகளுக்கு எண் -1 ல் விரவு வைக்கப்பட வேண்டும் .
கொரோணா பணிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.2 லட்சத்தை விடுபட்ட ஊராட்சிகளுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டும் . மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்று வதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியர் ஆகியோர் உறுதியளிக்கும் வரை எங்கலுடைய உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என கூட்டமைப்பு தலைவர் ஆனந்தநாயகி முத்துராமலிங்கம் தெரிவித்தார். கா.வினோத்குமார்