முதுகுளத்தூரில் 8 புதிய வழித்தடத்தை தொடங்கிவைத்து அமைச்சர் கண்ணப்பன் பேச்சு
ஜூலை, 30
முதுகுளத்தூரில் 8 புதிய வழித்தடங்களை அமைச்சர் கண்ணப்பன் தொடங்கிவைத்தார்
முதுகுளத்தூர் பஸ் நிலையத்தில் புதிய வழித்தடங்கள் தொடங்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது .
போக்குவரத்துறை அமைச்சர் கண்ணப்பன், கலந்து கொண்டு புதிய வழித்தடங்களை தொடங்கிவைத்தார் விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை வகித்தார் பின்பு பஸ் நிலையத்தின் வெளியே செல்லூர் ஊரைச் சேர்ந்த 25 பயனாளிகளுக்கு 1O லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் முதியோர் உதவித்தொகை, நிலபட்டா வழங்கி அமைச்சர் கண்ணப்பன் வழங்கினார் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் தமிழக போக்குவரத்துரையை அதிமுக அரசு 33 ஆயிரம் கோடி கடனை ஏற்றிவைத்துவிட்டு சென்றனர் இதனை சரிசெய்யும் பனி நடைபெற்று வருகிறது.
குடிநீர், போக்குவரத்து குறித்து வரும் மனுக்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சியில் ராமநாதபும் மாவட்ட குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டு சிறப்பாக செயல்பட்டதை அதிமுக ஆட்சியில் முடக்கிவிட்டனர்.
இப்போது குடிநீர் விநியோகம் செய்யும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது .ஜெயலலிதா ஆட்சியில் 5 லட்சம் கோடி கடனாக இருந்தது எடப்பாடி ஆட்சியில் 5 லட்சத்து 76 ஆயிரம் கோடி கடனாகியுள்ளது. முதுகுளத்தூர் தொகுதி மிக பெரிய தொகுதியை முன்னேற்ற நான் மட்டும் பாடுபட்டால் முடியாது அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைவரும் சகோதார்களாக தொகுதியை முன்னேற்ற பாடுபடுவோம் இவ்வாறு பேசினார்.
விழாவில் முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தி ஒன்றிய செயலாளர்கள் முக்குளத்தூர் (கிழக்கு) பூபதி மனி முதுகுளத்தூர் மேற்கு சண்முகம் , கடலாடி ஆறுமுகவேல் நகர செயலாளர் ஏ.ஷாஜஹான் முன்னாள் துணை சேர்மன் பாசில் அமீன் வெண்ணீர் வாய்க்கால் சேகர், தூவல் ஹரிமுத்துராமலிங்கம் , அழகர் உள்பட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர். கடலாடி, மற்றும் முதுகுளத்தூர் மேற்கு ஒன்றியத்திலிருந்து பாஜகவிலிருந்து விலகி அமைச்சர் முன்னிலையில் திமுக இணைந்தனர் . வினோத் காசி