முதுகுளத்தூரில் காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு கூட்டம்.
முதுகுளத்தூர் செப் 18
முதுகுளத்தூரில் வட்டார காங்கிரஸ் கமிட்டிபொதுக்குழு கூட்ட மமாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலை மையில் நடைபெற்றது வட்டார தலைவர்கள் ராமர் சுரேஷ்கிழக்கு ,புவனேஸ்வரன் மேற்கு,ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் சுரேஷ் காந்தி அனைவரையும் வரவேற்றார். வரும் உள்ளாட்சி தேர்தலில் பேரூர், நகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிதனிதது போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டன. சிறப்பு அழைப்பாளர் பினுவால் சிங் கலந்துகொண்டு கிராம கமிட்டி தலைவர்களின் பணிகள் குறித்து விளக்கினார். கிராம கமிட்டியை வலுப்படுததுவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார். கூட்டத்தில் மாநில செயலாளர் ஆனந்தகுமார்,.குமாரகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் ராமபாண்டி, விக்னேஷ், பூவலிங்கம், மோகன் உள்பட திரளானேரர் கலந்துகொண்டனர். முன்னதாக மேற்கு வட்டார காங்கி-ரஸ் அலுவலகத்தை மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா திறந்துவைத்தார். கா.வினோத்குமார்