முதலூர் ஸ்ரீ கழுகாசல மூர்த்தி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம்…
இராமநாதபுரம், செப்,8-இராமநாதபுரம் அருகே உள்ள முதலூர் கிராமத்தில் ஸ்ரீ கழுகாசலமூர்த்தி சுப்பிரமணிய சுவாமி குலதெய்வக்காரர்களின் ஏற்பாட்டில் ஸ்ரீ கழுகாசலமூர்த்தி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஆலய நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் புதன் கிழமை காலை 10 மணியளவில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் முதலூர் கிராமத்தில் நடந்த கும்பாபிஷேக விழா செவ்வாய் கிழமை காலை 9 மணிக்கு அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அன்று மாலை மங்கள வாத்தியங்கள் முழங்க முதல் கால யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து விஷேச த்ரவ்யாகதி, எந்த்ரஸ்தாபனம், விக்ரகப்ரதிஷ்டை செய்து அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நடைபெற்று விமான கலச ஸ்தாபனம் செய்யப்பட்டது. தொடர்ந்து புதன்கிழமை காலை 6மணிக்கு மங்கள இசையுடன் இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்று லெட்சுமி பூஜை, கோபூஜை , சூர்ய நமஸ்காரம், யாகசாலை பூஜைகள் நடைபெற்று உப்பூர் வெங்கட்ராமன் ஐயர் , திண்டுக்கல் மூர்த்தி ஐயர் ஆகியோர் தலைமையிலான வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று கருடன் வட்டமிட கோபுர கும்ப கலசத்தில் காலை 10மணிக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ கழுகாசலமூர்த்தி சுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக அலங்காரம் நடைபெற்று அருட் பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடந்தது. முதலூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி ராமசாமி தலைமையில் நடந்த விழாவில் அன்னதான ஏற்பாடுகளை மண்டபம் என்.முரளிராஜா, என்.ரகுபதி ராஜா, முதலூர் டி.சிவக்குமார், மற்றும் டி.செந்தில்குமார் குடும்பத்தினர் செய்திருந்தனர். கோவில் நிர்மான பணிகளில் குலமங்கலம் முருகன் ஸ்தபதி , சிற்பி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஈடுபட்டனர். மேலும் விழாவில் மலைராஜ், கார்த்திகேயன், சுப்பிரமணி, பாலசுப்பிரமணியன், முனியசாமி ,கந்தசாமி, மோகன், மூனீஸ்வரன், கந்தபாண்டி, கபில், கார்த்தி, மணிகண்டன், கரண், நிஷாந்த் ,நலன், நிமலன் உள்பட முதலூர் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை அருள்மிகு ஸ்ரீ கழுகாசலமூர்த்தி சுப்பிரமணிய சுவாமி குல தெய்வக்காரர்கள் சார்பில் நடத்துநர் செந்தில்குமார், வழக்கறிஞர் பாலமுருகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.