முசிறி, மணப்பாறை பகுதிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் இரண்டு லட்சத்திற்கு அதிகமான பணம் பறிமுதல்
திருச்சி
முசிறி, மணப்பாறை பகுதிகளில் லஞ்ச ஒழிப்பு பாலீசார் சோதனை நடத்தினார்கள் இரண்டு நடத்திய சோதனையில் இரண்டு லட்சத்திற்கு அதிகமான பணம் பறிமுதல் செய்தார்கள்.
முசிறி சார் பதிவாளர் அலுவலகத்தில் இடைத்தரகர்கள் மூலம் பணப் பரிவர்த்தனைகள் நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், சேவியர்ராணி ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று முசிறி சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது சார் பதிவாளர் (பொறுப்பு) சுகுமார் மற்றும் அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள ஆவண எழுத்தர்கள் மற்றும் இடைத்தரகர்களிடம் விசாரித்தனர். நேற்று மாலை 4 மணிக்கு அந்த அலுவலகத்திற்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று இரவு 8 மணி வரை விசாரணை நடத்தினர். இதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இடைத்தரகர்கள் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 250 கைப்பற்றப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்திய சம்பவம் முசிறி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் மணப்பாறையை அடுத்த மாகாளிப்பட்டியில் மணப்பாறை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு அதிகமானவர்கள் வந்து ஓட்டுனர் உரிமம் பெற்றுச் செல்வதோடு, வாகன உரிமம் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த அலுவலகத்தில் அதிக அளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.60 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இந்த சோதனை மதியம் 3 மணிக்கு தொடங்கி இரவு 8.15 மணிக்கு நிறைவு பெற்றது. இந்த இரண்டும் இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையால் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.