மாரந்தை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்திரதினவிழா
முதுகுளத்தூர். ஆக- 15,
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள மாரந்தை கிராமத்தில் உள்ள ஊரட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 75வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் தலைமையாசிரியை ஆர்.செல்வி தேசியக்கொடியினை ஏற்றிவைத்து துப்புரவு பணியாளர் களுக்கு பொன்னாடை போற்றி கௌரவப்படுத்தினார்.இதில் சக ஆசிரியர்கள் சமூக இடை வெளியை பின்பற்றி கலந்து கொண்டனர்.அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. வினோத் காசி