மழையினால் சேதமடைந்த வீட்டினை பார்வையிட்டு MLA நிதியிலிருந்து தலா ரூ .10,000 வீதம் நிதியுதவி
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குடபட்ட நவல்பட்டு ஊராட்சியில் மழையினால் சேதமடைந்த வீட்டினை பார்வையிட்டு அந்த வீட்டில் வசித்த பாஸ்கரன் பொன்மொழி தம்பதியினருக்கும், வடக்கு ஒன்றியத்தில் வேங்கூர் பகுதியில் மழையினால் சேதமடைந்த வீட்டினை பார்வையிட்டு வீட்டில் வசித்த முருகானந்தம் செல்வி மற்றும் ராஜேந்திரன் அங்கு பொண்ணு ஆகிய குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ .10,000 வீதம் நிதியுதவியினை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கிய போது எடுத்த படம்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே என் சேகரன் , மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு. கே எஸ் எம் கருணாநிதி மற்றும் பிரமுகர்கள் எம் மாரியப்பன், சண்முகம் கயல்விழி மற்றும் பலர் உடனிருந்தனர். ஆனந்தன்