மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப்பணிகள் குறித்த ஆய்வுப் பணிகள் மற்றும் காெராேனா தடுப்பு நடவடக்கை கள் குறித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் ஆய்வுப்பணி
இராமநாதபுரம், ஜூலை.10,
மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலத்தின் அருகே சிறிது தூரத்தில் கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப்பணிகள் குறித்த ஆய்வுப் பணிகள் மற்றும் காெராேனா தடுப்பு நடவடக்கை கள் குறித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் ஆய்வுப்பணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா, இராமநாதபுர சட்டமன்ற தொகுதி உறுப்பினர் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம், பரமக்குடி
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கரு.மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய சுகாதார இயக்க பணிகள் திட்ட இயக்குநர் தாரேஷ் அகமது உட்பட மருத்துவம் மற்றும்சுகாதார துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்