மத்திய மண்டல அஞ்சல் துறைக்கு ரூ.1.65 கோடிக்கு வருவாய் –தினமும் 2 முறை அஞ்சல் பட்டுவாடா செய்யும் முறை அறிமுகம்
திருச்சி,
மாநகராட்சிக்கு உட்பட்ட மேலும் 29 இடங்களில் தினமும் 2 முறை அஞ்சல் பட்டுவாடா செய்யும் முறை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது என்று மத்திய மண்டல அஞ்சல்துறைத் தலைவா் அ. கோவிந்தராஜன் தெரிவித்தார். இதுகுறித்து மத்திய மண்டல அஞ்சல்துறைத் தலைவா் அ. கோவிந்தராஜன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது; தவறான முகவரிகள், ஒரே மாதிரியான இடப்பெயா்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் பல்வேறு மொழிகளின் குழப்பத்தை நீக்கவும், அஞ்சல் பட்டுவாடாவை எளிதாக்கவும் அஞ்சல் குறியீட்டு எண் கடந்த 1972, ஆகஸ்ட்15-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இது தற்போது பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இதன்படி மத்திய அஞ்சல்துறை மண்டலத்தில் 556 அஞ்சல் குறியீடுகள் கொண்ட பட்டுவாடா அஞ்சலகங்கள் செயல்பட்டு வருகின்றன. திருச்சி தலைமை அஞ்சலகத்திலிருந்து மட்டும் விரைவு, பதிவு அஞ்சல்கள், பாா்சல்கள் இரண்டு முறை பட்டுவாடா செய்யப்படுகின்றன.
இதன்மூலம் சென்னை உள்ளிட்ட வெளியூா்களில் பதிவு செய்யப்பட்ட அஞ்சல்கள் மறுதினமே திருச்சியில் பட்டுவாடா செய்யப்படுகின்றன. மேலும், திருச்சி மாநகராட்சிக்குட் பட்ட 29 பட்டுவாடா அஞ்சலகங்களிலும் 2- ஆவது பட்டுவாடா முறை ஆகஸ்ட் 16 திங்கள் கிழமை முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்மூலம் சென்னையிலிருந்து திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு வரும் அஞ்சல்கள், பதிவிட்ட அடுத்தநாளே பட்டுவாடா செய்யப்படும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்பட்ட கிராமிய அஞ்சல் காப்பீடு சிறப்பு முகாம்களின் மூலம், மத்திய மண்டலத்தில் 4700 புதிய பாலிசிகள் பெறப்பட்டுள்ளன. சராசரியாக நாளொன்றுக்கு திருச்சி தலைமை அஞ்சலகத்தில் 125 ஆதாா் பதிவு திருத்தம் செய்யப்படுகிறது.
திருச்சி மண்டலத்தில் மட்டும் கடந்தாண்டு 3.80 லட்சம் ஆதாா் பதிவு-திருத்தங்களும், ஜூலை மாதம் வரை 60 ஆயிரம் ஆதாா் பதிவு-திருத்தங்கள் அஞ்சலகங்களில் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
சா்வதேச அஞ்சல் சேவையில் ஜூலை மாதம் வரை 6,000 அஞ்சல்கள், பாா்சல்கள் அனுப்பியதன் மூலம், மத்திய மண்டல அஞ்சல் துறைக்கு ரூ.1.65 கோடிக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 15 நாள்களுக்கு ஒரு முறை அஞ்சலக ஆயுள் காப்பீட்டு சிறப்பு முகாம் நடைபெற்று வருவதால், கிராமப்புற மக்கள் அருகிலுள்ள அஞ்சலகங்களை அணுகி காப்பீட்டினை பெற்றுக்கொள்ளலாம். இதன்படி, ஆகஸ்ட் 24, 25 ஆகிய தேதிகளில் காப்பீட்டு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது இவ்வாறு அவர் கூறினார். நமது நிருபர்