மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில்
திருச்சியில் கோவிட் தடுப்பு விழிப்புணர்வு வாகனத்தை சுகாதார பணிகள் துணை இயக்குனர் தொடங்கி வைத்தார்
திருச்சி,
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் திருச்சியில் இந்தியாவின் 75 வது ஆண்டு சுதந்திர பெருவிழா மற்றும் கோவிட் தடுப்பு விழிப்புணர்வு வாகனத்தை திருச்சி மாவட்ட தர கட்டுப்பாட்டு மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ். முருகானந்தம் திருச்சி மாவட்ட கொள்ளைநோய் தடுப்பு மருத்துவ அலுவலர் டாக்டர் எம்.எஸ். விக்னேஷ் கள விளம்பர அலுவலர் கே. தேவி பத்மநாபன் உள்ளிட்டோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த விழிப்புணர்வு வாகனத்தை சென்னையில் கடந்த வியாழக்கிழமை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு இணையமைச்சர் முனைவர் எல் முருகன் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
அப்போது பேசிய திருச்சி கள விளம்பர அலுவலர் திரு கே தேவி பத்மநாபன் இந்த விழிப்புணர்வு வாகனம் தஞ்சாவூர் திருவாரூர் சென்னை கோவை தர்மபுரி வேலூர் உள்ளிட்ட பல்வேறிடங்களில் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வருவதாக கூறினார்.
திருச்சியில் கோவிட் அதிகமாக பரவும் இடங்களில் கோவிட் தடுப்பூசி விழிப்புணர்வு நடத்த உள்ளதாக கூறினார். மேலும் நாட்டின் 75 ஆண்டு சுதந்திர கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வருவதாக கூறினார். திருச்சி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் இணையவழி கருத்தரங்கம், வாகன விழிப்புணர்வு, கண்காட்சி, இணையத்தளம் வழியாக சுதந்திர போராட்ட வீரர்கள் தொடர்பான போட்டிகள் இந்த வாரம் நடத்துவதாக தெரிவித்தார். மேலும் இந்த விழிப்புணர்வு வாகனம் ஆகஸ்ட் 26 வரே மூன்று நாட்களில் திருச்சியின் பல்வேறிடங்களில் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி கள விளம்பர உதவியாளர் கே. ரவீந்திரன் சுகாதார பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் மோகன் உள்ளிட்ட திருச்சி மாவட்ட சுகாதார துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.