மதுரை ஆதீன மடத்தின் 292வது மடாதிபதியாக 1980 ஆம் ஆண்டு முதல் இருந்த ஶ்ரீலஶ்ரீ அருணகிரிநாத ஶ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இறைவனடி சேர்ந்தார். 293 வது மடாதிபதி நித்தியானந்தாவா ?
மதுரை,
சைவ சமய திருமடம் தமிழகத்தின் மிக தொன்மையான சைவ சமய திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீன மடத்தின் 292வது மடாதிபதியாக 1980 ஆம் ஆண்டு முதல் ஶ்ரீலஶ்ரீ அருணகிரிநாத ஶ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வருகிறார்.
மதுரை ஆதீன மடத்தின் தற்போதைய பீடாதிபதி அருணகிரிநாதர் சுவாச கோளாறு காரணமாக கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி இரவு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராகாத நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்து வருகிறது.
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் (வயது 77) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.எனினும், இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்துவந்தநிலையில் சுவாசக்கோளாறு காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மதுரை ஆதினத்தின் உயிர் பிரிந்தது.
மதுரை ஆதினத்தின் 292-வது குருமகா சந்திதானமாக அருணகிரிநாதர் இருந்து வந்தார். மதுரை ஆதீனம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் மடத்தில் உள்ள அவரது அறையை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்ற காரணத்திற்காக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் மடத்தின் சொத்து விபரங்கள் அடங்கிய பத்திரங்கள், விலை உயர்ந்த நகைகள் முக்கிய ஆவணங்கள் உள்ளதால் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் பக்கத்தில் பதிவில், மதுரை ஆதீனம் விரைவில் நலம்பெற வேண்டி முகநூல் பக்கத்தில் நித்தியானந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் தன்னை மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாக குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆதீன மடத்திற்கான எல்லா பொறுப்புகளும், உரிமைகளும், கடமைகளும், அதிகாரங்களும் மற்றும் ஆன்மீக ரீதியான, மத ரீதியான சடங்குகள் மற்றும் பூஜைகள் செய்வதற்கான பாரம்பரிய உரிமைகள் பெற்று உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் நித்யானந்தா.
பரபரப்பு அறிக்கை ஆதீன மடத்தின் சொத்துக்கள் பலவற்றை குத்தகைக்கு கொடுத்த விவகார வழக்குகளும் உயர்நீதிமன்ற கிளையில் நிலுவையில் உள்ள நிலையில், தன்னை ஆதீன மடத்தின் அடுத்த மடாதிபதியாக குறிப்பிட்டு நித்தியானந்தா வெளியிட்டுள்ள அறிக்கை மீண்டும் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த விவகாரங்கள் தொடர்பாக ஆதீன மடம் உரிய விளக்கம் அளித்து மடாதிபதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்து, பின் வாபஸ் பெறப்பட்ட உத்தரவுகள் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளில் கடந்த 2018 மே மாதம் நித்தியானந்தா மடத்திற்குள் நுழைய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுக்களில், தன்னை 293 வது பீடாதிபதியாக குறிப்பிட்டிருந்தார் நித்தியானந்தா. அந்த குறிப்புகள் நித்தியானந்தா முறைகேடாக தயாரித்தவை என ஆதீன மடம் நீதிமன்றத்தில் குறிப்பிட்டு இருந்தது. அந்த வழக்குகள் தற்போதும் நிலுவையில் உள்ள நிலையில் மீண்டும் தன்னை 293வது மடாதிபதியாகக் குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மடாதிபதியாக அறிவித்துள்ள நித்யானந்தா கைலாசா நாட்டை விட்டு மதுரைக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
புவி.பாலஜி