மதுராந்தகம் அருகே கொரோனா தடுப்பூசி செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு 25 ரூபாய் மதிப்புள்ள காபி 1 ரூபாய்க்கு விற்பனை.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி தேசிய நெடுஞ்சாலை அருகில் முரளி என்பவர் மதர்ஸ் காபிஷாப் நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றிதழை காண்பித்தால் 25 ரூபாய் மதிப்புள்ள காபி 1,ரூபாய்க்கு வழங்கி வருகிறார்.
ஒரு நபருக்கு வாரம் ஒருமுறை என்ற கணக்கில் நான்கு வாரம் 1,ரூபாய்க்கு காபி வழங்கி வருகிறார். மேலும் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் 1,ரூபாய் கொரோனா நிவாரண நிதிக்கு கொடுக்க உள்ளதாக தெரிவித்தார். இந்த விழிப்புணர்வு என்பது பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகிற மூன்றாம் அலையை தடுக்கவே இவரது நோக்கமாக உள்ளது. அதனால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த செயலில் இவரது குடும்பத்தினர் அனைவருமே ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். ராஜசேகர்