மண்டபம் ஒன்றியத்தில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் – எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம் தொடங்கிவைத்தார்
இராமநாதபுரம், ஜூலை,9,
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மண்டபம் ஒன்றிய பகுதிகளில் மின்சார டிரான்ஸ்பார்மர்கள் பழுது காரணமாக சீரான மின்சாரம் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப் பட்டனர். அப்பகுதிகளில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு அதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட பொறுப்பாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தொடங்கிவைத்தார்.
இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மண்டபம் ஒன்றியத்தில் குயவன்குடி, அழகன்குளம், தாமரைகுளம், வேதாளை உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் மின்சார டிரான்ஸ் பார்மர்கள் பழுதடைந்து சீரான மின்சாரம் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து அப்பகுதியினர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு உடனடியாக 100 மெகாவாட் திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர்கள் அப்பகுதிகளில் அமைக்கப்பட்டது. இதனை எம்எல்ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார். இதில் மண்டபம் ஒன்றிய சேர்மன் சுப்புலெட்சுமி ஜீவானந்தம், துணை சேர்மன் பகவதி லெட்சுமி முத்துக்குமார், மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தௌபீக் அலி, மேற்கு ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், இராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கவிதா கதிரேசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் வாலாந்தரவை கே.ஜே.பிரவின், குயவன் குடி ஊராட்சி மன்ற தலைவர் குப்பைகனி, ஒன்றிய கவுன்சிலர் ஆறுமுகம் அம்மாள், அழகன் குளம் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி, ஒன்றிய கவுன்சிலர் சபியாராணி, தாமரைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் களஞ்சிய லெட்சுமி, ஒன்றிய கவுன்சிலர் சுகந்தி சோமசுந்தரம், வேதாளை ஊராட்சி மன்ற தலைவர் அல்லா பிச்சை, புதுமடம் ஊராட்சி மன்ற தலைவர் காமில் உசேன், இராமநாதபுரம் மின் வாரிய மேற்பார்வையாளர் பொறியாளர் மங்கலநாதன், செயற்பொறியாளர் ஷப்னம், நித்யா, மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். எம்.சோமசுந்தரம்