மணிகண்டம் ஒன்றியம், கள்ளிக்குடி ஊராட்சிக்குள்பட்ட பெரியகுளம் கரையில் 1000 பனை விதைகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தொடங்கி வைத்தார்
திருச்சி.aaka.24,
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், கள்ளிக்குடி ஊராட்சிக்குள்பட்ட பெரியகுளம் கரையில் 1000 பனை விதைகள் நடும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு நிகழ்வில் பங்கேற்று, முதல் கட்டமாக பனை விதைகள் நடும் பணியைத் தொடக்கி வைத்தாா்.
உதவிச் செயற்பொறியாளா் ஜெயராம், உதவிப் பொறியாளா் சுகுமாா், ஊராட்சித் தலைவா் சுந்தரம் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன், நிா்மலா மற்றும் ஷைன் திருச்சி அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் மனோஜ் தா்மா் மற்றும் நிா்வாகிகள் நிகழ்வில் பங்கேற்றனா்.
பனை விதைகள் நடும் பணி குறித்து மனோஜ் தா்மா் கூறியது: அரசு பனை மர மேம்பாட்டுத் திட்டத்தை அறிவித்து, மாநில மரமான மனை மரங்களை நட்டு பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ‘ஷைன் திருச்சி’ அமைப்பு சாா்பில் பனை விதைப்போம், பாரம்பரியம் காப்போம் என்ற விழிப்புணா்வு இயக்கத்தை தொடங்கியுள்ளோம்.
முதல் கட்டமாக பெரியகுளத்தில் 1000 பனை விதைகள் நடப்படவுள்ளன. கள்ளிக்குடி பகுதிகளிலுள்ள பெரிய, சிறிய அளவிலான குளங்கள், வாய்க்கால் பகுதிகளில் முதல் கட்டமாக 1000 பனைமர விதைகளை நடவுள்ளோம்.
தொடா்ந்து பெரம்பலூா் பகுதிகளிலிருந்து பனை விதைகள் வரவழைத்து, மேலும் 4 ஆயிரம் பனை மர விதைகள் நடவு செய்யத் திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம், நீா்நிலைகள் காக்கப்படும், பனையின் மூலம் கிடைக்கும் பொருள்களினால் பனைத் தொழிலாளா்கள் பயன் பெறுவா். இதற்கான உறுதிமொழியை அரசே ஏற்று செயல்படுத்தியுள்ளது வரவேற்கக்கூடியது இவ்வாறு அவர் கூறினார்.