மணப்பாறையில் கோயில் பூசாரிகளுக்கு தமிழக அரசின் உதவித்தொகை மற்றும் நிவாரண தொகுப்புகளை சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல்சமது வழங்கினார்.
திருச்சி; மணப்பாறையில் கோயில் பூசாரிகளுக்கு தமிழக அரசின் உதவித்தொகை மற்றும் நிவாரண தொகுப்புகளை சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல்சமது வழங்கினாா். கோயில் பூசாரிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ரூ. 4000 ஆயிரம் உதவிதொகை மற்றும் மளிகைப் பொருள்கள் தொகுப்பு வழங்கும் விழா மணப்பாறை மாரியம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது. மணப்பாறை நல்லாண்டவா் கோயில் மற்றும் மாரியம்மன் கோயில் செயல் அலுவலா் அ. கண்ணன் வரவேற்றாா்.
இதில் சிறப்பு விருந்தினராக மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல்சமது கலந்துகொண்டு முதற்கட்டமாக 31 பூசாரிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கிப் பேசினாா். விழாவில் மாரியம்மன் கோயில் பரம்பரை அரங்காவலா் ஆா்.வீ.எஸ். வீரமணி, மணப்பாறை ஒன்றிய பெருந்தலைவா் அமிா்தவள்ளி ராமசாமி, திமுக நகரச் செயலா் கீதா மைக்கேல்ராஜ். ஒன்றியச் செயலா் சி.ராமசாமி, மமக்க மாநில அமைப்பு செயலா் காதா்மொய்தீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அதை தொடர்ந்து மணப்பாறை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மருங்காபுரி ஒன்றியம் பழையபாளையம் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல் சமது வழங்கினார்.
தொடர்ச்சியாக அங்கன்வாடி, நியாயவிலை கடை, சத்துணவு கூடம் ஆகிய கட்டிடங்களை பார்வையிட்டு பழுதடைந்த கட்டிடங்களை புதுப்பித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர உரிய அதிகாரிகளுக்கு அறிவுறித்தினார். அக்கிராமத்தின் நியாயவிலை கடையினை ஆய்வு செய்து தரமான அரிசி வழங்குவதை உறுதி செய்தார். மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து மணப்பாறை வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மணப்பாறை, மருங்காபுரி கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட தலைமை ஆசிரியர்களை சந்தித்து நகராட்சி 5 வது வார்டு தொடக்க பள்ளி, நகராட்சி 15வது வார்டு நடுநிலை பள்ளி ஆகியவற்றை தரம் உயர்த்தி மணப்பாறையில் பெண்களுக்கு தனி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த ஆலோசனை செய்யப்பட்டது
இதை தொடர்ந்து செவலூர் உயர்நிலை பள்ளியை பார்வையிட்டு கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்க்கு தேவையான இடத்தை தேர்வு செய்ய வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் கல்வி துறை அதிகாரிகளுடன் பார்வையிட்டார்.
வையம்பட்டி ஒன்றியம் சடையம்பட்டி உயர்நிலை பள்ளிகூடம் ஆய்வு செய்து பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் கட்டித்தர நிர்வாகத்தின் கோரிக்கை ஏற்று விரைவில் சுற்று சுவர் கட்டித்தர சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல் சமது வாக்குறுதி அளித்தார். தொடர்ச்சியாக ஏழை மாணவர்களுக்கு உணவு பொருட்கள் ஆசிரியர்கள் சார்பில் வழங்கினார். மற்றும் பள்ளிகூட வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் கலந்து கொண்டேன்.
ஷாஹுல் ஹமீது.