மணப்பாறையில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல் சமது ஆகியோர் ஆய்வு
திருச்சி,
மணப்பாறையில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். மணப்பாறை வட்டம் செவலூா் கிராமத்தில் நீா்நிலைகள் தூா்வாரும் பணியை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். அதனைத்தொடா்ந்து பேருந்துநிலையப்பகுதியில் நகராட்சி தூய்மை பணியாளா்களுக்கு காய்கனி மற்றும் மளிகைப்பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி நடமாடும் காய்கனி விற்பனை வாகனங்கலை தொடக்கி வைத்தாா். பி
றகு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியத் தலைவா் அமிா்தவள்ளி ராமசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 211 தூய்மைப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பு பாதுக்காப்புக் கவச உடைகளை அமைச்சா் வழங்கினா்.

மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டப்பேரவை உறுப்பினா் ப.அப்துசமது ஆகியோா், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் நலன் குறித்தும், அவா்களது தேவைகள் குறித்தும் மருத்துவ மனை முதன்மை மருத்துவ அலுவலா் மருத்துவா் முத்து.காா்த்திகேயனிடம் கேட்டறிந்தனா்.
நிகழ்ச்சியில், மணப்பாறை நகராட்சி ஆணையா்(பொ) க.முத்து, ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் ரவிச்சந்திரன், ரேவதி, ஒன்றியதலைவா் பழனியாண்டி, குணசீலன், திமுக நகரச் செயலாளா் கீதா ஆ.மைக்கேல்ராஜ், ஒன்றியச் செயலாளா்கள் ராமசாமி, சபியுல்லா, மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலா் காதா்மொய்தீன், திருச்சி மாவட்டச் செயலாளா் அ.பைஸ் அஹமது உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
ஷாகுல்ஹமித்