மணப்பாறையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் பங்கேற்பு
திருச்சி
மணப்பாறையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் கலந்து கொண்டனர்.
திருச்சி தெற்கு அ.தி.மு.க. மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை நகராட்சி பகுதியில் வருகின்ற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மணப்பாறை நகராட்சி 11, 12, 13, 14 ஆகிய வட்டப் பகுதிகளில் முன்னாள் மக்களவை உறுப்பினரும், அதிமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமாா் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏவும், அதிமுக மருங்காபுரி வடக்கு ஒன்றியச் செயலளாருமான ஆா். சந்திரசேகா் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் வரும் தோ்தலில் அதிமுக அதிக இடங்களிலும், பெருவாரியான வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற கட்சி நிா்வாகிகள் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் அதிமுக நகரச் செயலாளர் பவுன் எம். ராமமூா்த்தி, ஒன்றியச் செயலாளர் எம்.பி. வெங்கடாசலம், மாவட்ட பொருளாளா் நெட்ஸ் எம். இளங்கோ, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலத் துணைத் தலைவா் மணவை ஜெ. ஸ்ரீதரன், பொதுக்குழு உறுப்பினா் எஸ்.எம்.கே.எம். முகமது இஸ்மாயில் மற்றும் நகர, மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.