போகலூர் வட்டார காங்கிரஸ் சார்பில் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்லத்துரை அப்துல்லா ஆலோசனையின்படி 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு போகலூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக வட்டார தலைவர் முனீஸ்வரன் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் முத்து தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் தனிக்கொடி ,விடுதலை சிறுத்தைகள் மாநில துணைத்தலைவர் கோபால், பாண்டி, கிராம கமிட்டி தலைவர்கள் கோபால், பாண்டி, ராமகிருஷ்ணன், மாணிக்கம், மகாராஜன் வெங்கடேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர். எம்.சோமசுந்தரம்