போகலூர் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் கருத்து கேட்பு கூட்டம்.
ஆக,8,
இராமநாதபுரம் மாவட்டம் போகலூர் வட்டார காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளிடம் கட்சி வளர்ச்சி பணி குறித்த கருத்து கேட்பு கூட்டம் சத்திரக்குடியில் நடந்தது. கூட்டத்திற்கு வட்டார தலைவர் முனீஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா முன்னிலையில் மாவட்ட மேலிட பொறுப்பாளர் பினுலால் சிங் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கட்சியின் வளர்ச்சி குறித்தும் எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் கருத்துகளை கேட்டறிந்தார். நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன், மாவட்ட துணை தலைவர்கள் கருப்பையா, இப்றாகீம், அர்ஜுனன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் திருமுருகன், தனிக்கோடி, விஜயகுமார், கிருஷ்ணமூர்த்தி, குருசாமி, மற்றும் கிராம கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். எம்.சோமசுந்தரம்