பொது காப்பீடு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம்
திருச்சி , ஆகஸ்ட் . 5 –
பொது காப்பீடு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசை கண்டித்து ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் இந்தியா முழுவதும் நடைபெற உள்ளது .இதன் ஒரு பகுதியாக பொது இன்சூரன்ஸ் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று (4-ந் தேதி) காலை திருச்சி ஒத்தக்கடையில் உள்ள இன்சூரன்ஸ் அலுவலகம் முன்பு அதிகாரிகள் சங்க மண்டல தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்ட விளக்க உரையை மதுரை மண்டல இணைச் செயலாளர் ராஜமகேந்திரன், காப்பீட்டு ஊழியர் சங்க தஞ்சை கோட்ட உதவி தலைவர் ஜோன்ஸ், எஸ்.சி |எஸ்.டி நலச்சங்க தலைவர் செந்தில், நியூ இந்தியா அதிகாரிகள் சங்க தலைவர் அதிகாரிகள் சங்க தலைவர் நீலகண்டன் ஆகியோர் வழங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசு தனியார்மய அறிவிப்பை உடனே வாபஸ் வாங்க வேண்டும், பென்சன் திட்டத்தில் முன்னேற்றத்தை வெளிப்படுத்து, அரசு பொது இன்சூரன்ஸ் தனியாருக்கு விற்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. ஆனந்தன்