பேரறிஞர் அண்ணாவின் 113 ஆவது பிறந்தநாள் விழா திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை
திருச்சி
பேரறிஞர் அண்ணாவின் 113 ஆவது பிறந்தநாள் விழா திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
உலகமெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களின் இல்லங்களில் சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கும் அரசியல் வித்தகர் மேடைப்பேச்சாளர் சிறந்த எழுத்தாளர் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்னும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு எடுத்துக் காட்டிய அரசியல் ஆசான் மறைந்த காஞ்சி தந்த காவியத்தலைவன் பேரறிஞர் அண்ணா அவர்களின்113வது பிறந்த நாள் விழாவையொட்டி திருச்சி தெற்கு மாவட்ட கழக சார்பில் திருச்சி சிந்தாமணியில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
அண்ணாவின் 113வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட கழக அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகளை காசோலையாக சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பில் பயனாளிகளுக்கு வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் கே.என். சேகரன், வண்ணை அரங்கநாதன், கவிஞர் சல்மா, செந்தில், கோவிந்த ராஜன், கருணாநிதி,மதிவாணன், சபியுல்லா மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றிய பகுதி நகரபேரூர் கழகசெயலாளர் கழகசார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் கழக முன்னோடிகள் கழக உடன்பிறப்புகள் என பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
அதேபோல் திருச்சியில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்வில் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் மாநகரச் செயலாளர் அன்பழகன் முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி அவைத்தலைவர் அம்பிகாவதி, டோல்கேட் சுப்பிரமணி செயற்குழு உறுப்பினர் செ வந்தி லிங்கம், ராமலிங்கம் காமராஜ் கலைச்செல்வி பகுதி செயலாளர்கள் கண்ணன் மோகன்தாஸ் இளங்கோ ஒன்றிய செயலாளர்கள் கருப்பையா கதிர்வேல், மற்றும் கழக நிர்வாகிகள் போட்டோ கமால், தர்மு சேகர் சிங்காரம் கலை ராஜேந்திரன் துர்கா தேவி பாலமுருகன் சந்திரன் கார்த்திக் மாணிக்கம் எம் ஆர் எஸ் குமார் கருத்து கதிரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்