பெருந்தலைவர் காமராஜரின் 119வது பிறந்த தின விழாவை திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் கொண்டாட்டம்
திருச்சி,
பெருந்தலைவர் காமராஜரின் 119வது பிறந்த தின விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிவழிகாட்டுதலின்படி மாவட்ட கழக பொருளாளர் கோவிந்தராஜின் தலைமையில் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.இந்நிகழ்வில் பகுதி கழக செயலாளர்கள் மதிவாணன், நீலமேகம் ,தர்மராஜ், ராஜசேகர் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனந்தன்