பெருந்தலைவர் காமராஜரின் 119- வது பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாப்பட்டது
தொண்டி, ஜூலை.15-
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 119- வது பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக தலைமை ஆசிரியை நல்லாசிரியர் சாந்தி தலைமையில் கொண்டாப்பெற்றது. இதில் காமராஜர் தொண்டர் திருநாவுக்கரசு உட்பட மக்கள் சட்ட உரிமைகள் கழகத்தினர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை சுபஸ்ரீ அனைவரையும் வரவேற்றார்.
காமராஜர் வேடமணிந்த மாணவர்களை ஆசிரியைகள் மலர் தூவி வரவேற்றனர். பெருந்தலைவரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதனைத்தொடர்ந்து காமராஜரைப் பற்றிய பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பாக பேசிய மாணவி சாஹித்யா உட்பட மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. சமூக இடைவெளியுடன் பெற்றோர்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ராதா நன்றி கூறினார். சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்