பெரிய நகரங்களில்ஆழ்துளை கிணறு அமைக்கும் போது விதிகள் பின்பற்றப்படுகிறதா கண்காணிக்க தனி குழுக்கள் அமைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை
திருச்சி, ஆகஸ்ட்.30,
தமிழ்நாடு கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் கட்டிட பொறியாளர்கள் சங்கம் கூட்டம் நிறுவனர் மற்றும் மாநிலத் தலைவர் பொறியாளர் பெரு . கணபதிதலைமையில் சங்கமம் கூட்டம் மற்றும் 2021 – 2022 புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் நடைபெற்ற கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் அன்பழகன் மாநில செய்தி தொடர்பாளர் தனபால் தஞ்சை மாவட்டத் தலைவர் திருமாறன் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் முஹம்மது ஹம்சான் திருச்சி மாவட்ட செயலாளர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலச் செயலாளர் சாம்ராட் அனைவரையும் வரவேற்றார்.
மாநில பொருளாளர் சுரேஷ் கோபி சிறப்புரையாற்றி தீர்மானங்களை வாசித்தார். கட்டுமானத் துறைக்கு அத்தியாவசிய தேவையான சிமெண்ட் இரும்பு கம்பி மணல் போன்ற கட்டுமானப் பொருட்கள் விலை ஏற்றத்தை தடுக்க மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு கட்டுமான பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிடங்கள் 2019ஆம் ஆண்டு ஆணைப்படி தற்போது கட்டப்படும் கட்டிடங்கள் விதிகளுக்கு உட்பட்டு கட்டிடப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என ஆய்வு செய்ய பறக்கும்படை அமைத்திட வேண்டும்.
தரமான கட்டிடங்களை உருவாக்க மற்றும் திறமையான கட்டுமான பொறியாளர்கள் ஐ உருவாக்க மேலும் போலி கட்டுமான பொறியாளர்களை தடுக்க கட்டுமான பொறியாளர்கள் என தனி நல வாரியம் அமைத்திட வேண்டும். கட்டுமானத் துறைக்கு அத்தியாவசியமான சிமெண்ட் இரும்பு கம்பி மணல் போன்ற கட்டுமானப் பொருட்கள் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் தமிழக அரசு சிறப்பு அங்காடிகளை தமிழகம் முழுவதும் ஏற்படுத்திட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள போலி( M-Sand )சாண்ட் B-Sand) உற்பத்தியாளர்களைஇனங்கண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழகத்தில் நிலவும் மணல் தட்டுப்பாட்டை தவிர்க்க போலியான விலையேற்றத்தை தடுத்து நிறுத்தி தமிழக அரசின் நேரடி விற்பனை நிலையத்தை அமைத்து கட்டட பொறியாளர்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க வேண்டும்.
மாட்டு வண்டியில் மணல் விற்பனை செய்யும் ஏழை விவசாயிகளுக்கு சரியான உரிமம் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் கட்டுமான சம்பந்தப்பட்ட வளர்ச்சித் திட்டங்களில் கட்டப்படும் கட்டிடங்கள் மற்றும் சாலைகள் மேலும் இதர கட்டுமான சார்ந்த வேலைகளுக்கு தரத்தை நிர்ணயிக்க தரக்கட்டுப்பாடு சான்றிதழ்கள் NiT மூலம் வழங்க வேண்டும். தமிழகத்தில் நடைபெறும் கட்டுமான தொடர்பான தர ஆய்வுகளை மேற்கொள்ள எங்கள் சங்கத்தின் சார்பில் இலவசமாக செய்து தரச் சான்றிதழ் வழங்கி வருகிறோம். இதனை ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசை எங்கள் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளவும் கேட்டுக் கொள்கிறோம்.
நிலத்தடி நீரை பாதுகாக்க பெரு நகரங்களில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் விதிகளுக்குப் புறம்பாக அதிக ஆழத்தில் துளையிட்டு குடிநீர் எடுப்பதன் மூலம் கடல்நீர் உட்புகுந்து குடிநீர் கெட்டுப் போகிறது எனவே ஆழ்துளை கிணறு அமைக்கும் பது விதிகள் பின்பற்றப் படுகிறதா என கண்காணிக்க குழு அமைக்க தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தின் முடிவில் மாநில வணிக மேம்பாட்டு தலைவர் சாதிக் பாட்சா அனைவருக்கும் நன்றி கூறினார். இதில் கலந்து கொண்ட அனைவரும் சமூக இடைவெளியுடன் கூடிய முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.