புதுப்பட்டிணத்தில் தி.மு.க கொடியேற்றி கலைஞர் பிறந்த நாள் விழா
புதுப்பட்டிணம், ஜூலை.26-
இராமநாதபுரம் மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலைஅருகே உள்ள கடலோர கிராமமான புதுப்பட்டிணத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக முத்தமிழ் அறிஞர் டாக்டர். கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு புதுப்பட்டினம் பஸ் நிலையம் அருகில் உள்ள கழகத்தின் கொடி ஏற்றப்பட்டட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு திருவாடானை யூனியன் சேர்மன் முகமது முக்தார் தலைமைத் தாங்கினார். திருவாடானை தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் கபீப் முகம்மது அனைவரையும் வரவேற்றார். கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்