புதுச்சேரியில் மேலும் 107 பேருக்கு தொற்று பாதிப்பு 2 பேர் பலி
புதுச்சேரி
புதுவையில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினர். புதிதாக 107 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தொற்று பரிசோதனைபுதுவையில் காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 5 ஆயிரத்து 214 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 107 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 170 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 173 பேரும் வீடுகளில் 790 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 42 பேர் குணமடைந்தனர்.2 பேர் பலிஇந்தநிலையில் 2 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராகவேந்திரா நகரை சேர்ந்த 56 வயது ஆண், ஏனாமில் 56 வயது ஆண் ஆகியோர் பலியாகி உள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,827 ஆக உயர்ந்துள்ளது.புதுவையில் கொரோனா உயிரிழப்பு 1.46 சதவீதமாகவும், குணமடைவது 97.77 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 10 பேர், பொதுமக்கள் 1,874 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதுவரை 8 லட்சத்து 83 ஆயிரத்து 568 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.புதுவையில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.