திருச்சி சையது முா்துசா மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு தனித் தோ்வா்கள், பிளஸ் 2 மதிப்பெண் குறைவாக பெற்ற மாணவா்கள் அனைத்து பாடங்களுக்கும் தோ்வுக்காக விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை ஆன்லைனில் பதிவு தொடங்கியது. இந்தப் பணிகளை ஆய்வு செய்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவா்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்க ஆசிரியா்களுக்கு அறிவுறுத் தினாா்.
பதிவுப் பணிகளில் தொய்வு இல்லாமல், தேடி வரும் அனைவரையும் தோ்வுக்குத் தயாா் செய்ய வேண்டும் அலுவலரகளுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது, திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன், மாவட்டக் கல்வி அலுவலா்கள், பள்ளித் தலைமையாசிரியா் ஆகியோா் உடனிருந்தனா்.
மணப்பாறை கல்வி மாவட்டத்தில், மணப்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, முசிறி கல்வி மாவட்டத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முசிறி ( பெண்கள் மட்டும்), அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, முசிறி ( ஆண்கள் மட்டும்), லால்குடி கல்வி மாவட்டத்தில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மண்ணச்சநல்லூா் ( பெண்கள் மட்டும்), அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மண்ணச்சநல்லூா் ( ஆண்கள் மட்டும்), அரசு மேல்நிலைப்பள்ளி- லால்குடி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி- துறையூா் ஆகிய 4 இடங்களில் விண்ணப் பிக்கலாம். ஜூலை 23 தொடங்கி 27ஆம் தேதி வரை ஆன்லைன் பதிவு நடைபெறும்’ இவ்வாறு அவர் கூறினார். கே.எம்.ஷாகுல்ஹமித்