பிரதம மந்திரி கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஊரகச் சாலைகள் குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம்
திருச்சி,
பிரதம மந்திரி கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஊரகச் சாலைகள் குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் நடைபெற்றது.
சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய ஊரக வளா்ச்சித் துறை மூலம் பிரதம மந்திரி கிராமச் சலைகள் மேம்பாட்டுத் திட்ட விழா 2021 ஜூன் தொடங்கி 2022 ஆக. 15 வரை ஓராண்டுக்குக் கொண்டாடப்படவுள்ளது. அதனடிப்படையில் மாவட்ட அளவில் நடைபெற்ற கருத்தரங்குக்கு மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தலைமை வகித்தாா். இதில் பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படும் விதம் குறித்து, ஊரகக் கட்டுமானத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, பிரதம மந்திரி கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் – 3 ஐ திருச்சி மாவட்டத்தில் செயல்படுத்துதல், சாலைப் பாதுகாப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
கருத்தரங்கில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஆா். சங்கா், திருச்சி தேசிய தொழில் நுட்பக் கல்லூரிப் பேராசிரியா் எஸ். மோசஸ்சாந்தகுமாா், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் த. ராஜேந்திரன், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் பி. செல்வராஜ், உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா் ஆகியோா் பேசினா். அனைத்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உதவி செயற்பொறியாளா்கள், உதவிப்பொறியாளா்கள் கலந்து கொண்டனா்.