பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் 42 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகளும், 90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு ஆய்வில் தகவல்
திருச்சி ,
பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் 42 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகளும், 90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்று ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றபின் அமைச்சரவை மாற்றப்படாமல் இருந்த நிலையில், கடந்த புதன்கிழமை மத்திய அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. 12 அமைச்சர்கள் ராஜிநாமா செய்கனர் 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். முக்கியமாக, சுகாதாரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், சட்டம், விளையாட்டு ஆகிய துறைகளுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் 42 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகளும், 90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்று ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு (ஏடிஆர்) 78 அமைச்சர்கள் குறித்து ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
மத்திய அமைச்சரவையில் உள்ள 78 அமைச்சர்களின் தேர்தல் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்ததில், 78 அமைச்சர்களில் குறைந்தபட்சம் 42 சதவீதம் பேர் மீது(33 பேர்) கிரிமினல் வழக்குகள் உள்ளன. இந்த அமைச்சர்களில் 31 சதவீதம் (24 அமைச்சர்கள்) மீது தீவிரமான குற்ற வழக்குகளான கொலை மற்றும் கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய மத்திய அமைச்சரவையில் 78 அமைச்சர்களின் சொத்து விவரங்களை ஆய்வு செய்ததில், 90 சதவீதம் பேர் அதாவது 70 அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள். அதாவது ரூ.50 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை அமைச்சர்கள் ஜோதிர் ஆதித்யா சிந்தியா(ரூ. 379 கோடிக்கு மேல்), பியூஷ் கோயல் (ரூ. 95 கோடிக்கு மேல்), நாராயண் தாது ராணே (ரூ. 87 கோடிக்கு மேல்), ராஜீவ் சந்திரசேகர் (ரூ. 64 கோடிக்கு மேல்) ஆகியோர் வைத்துள்ளனர்.
ஒரு அமைச்சருக்கு சராசரியாக சுமார் ரூ.24,16.24 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு கோடிக்கு குறைவாக 8 அமைச்சர்கள் சொத்துக்கள் வைத்துள்ளனர். அவர்களில் திரிபுராவைச் சேர்ந்த பிரதிமா பூமிக் (ரூ. 6 லட்சத்துக்கு மேல்), மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஜான் பர்லா (ரூ.14 லட்சத்துக்கு மேல்), ராஜஸ்தானைச் சேர்ந்த கைலாஷ் சௌத்ரி ரூ. 24 லட்சத்துக்கு மேல்), ஒடிசாவைச் சேர்ந்த பிஷ்வேஸ்வர் துடு (ரூ. 27 லட்சத்திற்கு மேல்), மகாராஷ்டிராவைச் சேர்ந்த வி முரளீதரன் (ரூ.27 லட்சத்துக்கு மேல்) வைத்துள்ளனர். மேலும் 16 அமைச்சர்கள் ரூ.1 கோடிக்கு மேலாகக் கடனும், அவர்களில் 3 பேர் அறிவிக்கப்பட்ட வகையில் ரூ.10 கோடிக்குக் கடனும் வைத்துள்ளனர். மேலும் 8 ஆம் வகுப்புவரை படித்தவர்கள் 2 பேர், பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் 3 பேர், 12 ஆம் வகுப்புக்குள்ளாகவே படித்தவர்கள் 12 பேர், 12 வகுப்பு படித்தவர்கள் 5 பேர், பட்டதாரிகள் 17 பேர், தொழிற்முறைப் படிப்பை படித்தவர்கள் 17 பேர், முதுகலை வரை படித்தவர்கள் 21, முனைவர் பட்டம் பெற்றவர்கள் 9 பேர், பட்டயம் வரை படித்தவர்கள் 2 பேர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.கே. ஷாகுல் ஹமீது