இதுபோன்ற செயல்கள் மத்திய மண்டலத்தில் நடைபெறாத வண்ணம் பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, பாலியல் ரீதியான தொந்தரவுகளை போக்கிடும் வகையில் ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்தும் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் மற்றும் முதல்வா்களுடன் மத்திய மண்டல ஐஜி வி. பாலகிருஷ்ணன், இணைய வழியில் ஆலோசனை நடத்தினாா். கூட்டத்தில் அவா் பேசியதாவது: இணைய வழியில் வகுப்புகளை நடத்தும் அனைத்து பள்ளிகளும் அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அனைத்து ஆன்லைன் வகுப்புகளும் சம்பந்தப்பட்ட பள்ளி நிா்வாகத்தால் முழுவதுமாக பதிவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். மேலும் பள்ளி நிா்வாகத்தினா் மற்றும் பெற்றோா் ஆசிரியா் கழகத்தைச் சாா்ந்த இரு நபா்கள் மூலமாக குறிப்பிட்ட இடைவெளியில் அந்த பதிவுகள் முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.
பள்ளி மாணவ, மாணவிகள் பாலியல் தொந்தரவு தொடா்பான புகாா்களை எளிதாக அளித்திடும் வகையில் காவல்துறையின் உதவி எண்கள் பள்ளி நிா்வாகத்தால் மாணவ, மாணவிகளுக்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் புகாா்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைக்கும் ஆசிரியா்கள் மீது போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆன்லைன் வகுப்புகளை எடுக்கும் ஆசிரியா்கள் கண்ணியமான முறையில் செயல்படுவதையும், மாணவ, மாணவிகள் அச்சமும் தயக்கமும் இன்றி பயில்வதை உறுதி செய்ய வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்..இக்கூட்டத்தில், மத்திய மண்டலத்தில் உள்ள சுமாா் 255 பள்ளிகளின் முதல்வா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.