பாலக்கரை பகுதியில் அப்துல் ரஹ்மான்பச்சிளம் பிறை கொடியை எம். ஏற்றம் மற்றும் சார்பில் வக்ஃப் வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மானுக்கு பாராட்டு விழா
திருச்சி
திருச்சி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் வக்ஃப் வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மானுக்கு பாராட்டு விழா நடைபெற்றது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில முதன்மை துணைத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக கடந்த 22.97 2021 அன்று பொறுப்பேற்றார். பின்னர் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சென்னையில் இருந்து ரயில் மூலம் 28. 07.2021 புதன்கிழமை அதிகாலை திருச்சி ரயில்வே நிலையம் வந்தார். அவருக்கு திருச்சி தெற்கு மாவட்ட முஸ்லிம் லீக் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக பொறுப்பேற்றுள்ள, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் வாரிய தலைவராக பொறுப்பேற்ற பிறகு திருச்சி மாவட்டத்திற்கு 28.7.2021 புதன்கிழமையன்று வருகை தந்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட சார்பில் பாலக்கரையில் வடக்கு மாவட்ட தலைவர் ஹாஜி அப்துல் வஹாப், தெற்கு மாவட்ட செயலாளர் கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பாலக்கரை, ரவுண்டானா அருகில், தாய்ச்சபை பச்சிளம் பிறைக்கொடியினை வக்ஃப் வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மான் ஏற்றி வைத்தார்.
பின்னர் பாலக்கரை, காஜா கடை சந்தில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் திருச்சி வடக்கு மாவட்ட மாவட்டத் தலைவர் ஹாஜி அப்துல் வஹாப் தலைமையில் பாராட்டு விழா கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான், வடக்கு மாவட்ட செயலாளர் நிஜாம்தீன் ஆகியோர் வக்ஃப் வாரிய தலைவராக பொறுபேற்றுள்ள அப்துல் ரஹ்மானை பாராட்டி பேசினார். பின்னர் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவரும் மாநில முதன்மை துணைத் தலைவருமான எம். அப்துல் ரஹ்மான் சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் திருச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள், யூத் லீக், எம்.எஸ்.எப்., எஸ்.டி.யூ., மற்றும் வார்டு பிரைமரி நிர்வாகிகள், உலமாக்கள், ஜமாஅத் நிர்வாகிகள், எம்.எல்.எஸ். நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு வக்ஃப் வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மானுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இறுதியில் மாநில எம்.எஸ்.எப். பொதுச்செயலாளர் அன்சர் அலி நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை தெற்கு மாவட்ட பொருளாளர் பி.எம். ஹூமாயூன் நன்றி கூறினார். கே.எம்.ஷாமுல்ஹமித்