பாரத பிரதமர் ஏழாண்டு சாதனை நிறைவு.
ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுபாக்கம் ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாரத பிரதமர் ஏழாண்டு சாதனை நிறைவு தினத்தை கொண்டாடும் விதமாக ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநிலத் தலைவர் டாக்டர் எல்.முருகன், மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் ஜி, உத்தர விட்டதன் படியும் மாவட்டத் தலைவர் வி.பலராமன் வழிகாட்டுதல் படியும் மாவட்ட பொதுச் செயலாளர் எ.தயாளன் அறிவுறுத்தலின்படி ஏழை எளிய மக்களுக்கு மதூர் எலப்பாக்கம் ஆணைக்குன்னம், ஆகிய கிராமங்களில் ஏழை எளிய மக்களுக்கு உணவு கபசுரக் குடிநீர் முக கவசம் ஆகியவற்றை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஒன்றிய தலைவர் ஆர்.முருகன் தலைமையில் நடைபெற்றது. உடன் அரசு தொடர்பு ஒன்றிய தலைவர் ரவி கல்வியாளர், பிரிவு ஒன்றிய தலைவர் ஆறுமுகம், ஆகியோர் உடனிருந்தனர். ராஜசேகர்