பாரதிய ஜனதா அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸின் சார்பில் சைக்கிள் பேரணி
திருச்சி,
கொரோனாவால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் பெட்ரோல், டீசல், தினமும் உயர்த்தியும் சமையல் எரிவாயு ரூ.25 ம் விலையை உயர்த்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸின் சார்பில் சைக்கிள் பேரணி மாவட்ட தலைவர் வி.ஜவகர் தலைமையில் நேற்று காலை கொரோனா விதிகளுக்கு உட்பட்டு மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான அருணாசலம் மன்றத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ராஜா நசீர், மாநில பொதுச் செயலாளர்கள் வக்கீல் எம் சரவணன் ஜி கே முரளி, வக்கீல் இளங்கோவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ், சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் முகமது முகையத்தீன், ராஜா டேனியல் ராய், கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம், ரவி, ராஜ் மோகன், குழந்தைவேலு, முத்து, ஓவியர் கஸ்பர், மாவட்டச் செயலாளர் சரவண சுந்தர், மாவட்ட துணைத்தலைவர்கள் முரளி, சந்தான கிருஷ்ணன், புத்தூர் சார்லஸ், மெய்யநாதன், பட்டதாரி அணி தலைவர் ரியாஸ், தாரநல்லூர் மாணிக்கவாசகம், ரபீக், கருமண்டபம் பெருமாள், மகளிரணி ஷீலா, பஞ்சாயத்து ராஜ் அணி அண்ணாதுரை, இளைஞர் காங்கிரஸ் உறையூர் கிருஷ்ணா, மீனவர் அணி தனபால், சத்தியநாதன், காட்டூர் சக்தி, வார்டு தலைவர்கள் சரவணன், உறையூர் மனோகர், இளைஞரணி பாலா, உறையூர் ஜெகதீஷ், சௌந்தர் வடிவேலு, சக்தி, அனந்தபத்மநாபன், பத்மநாபன், வெங்கடேஷ், திலீபன், சுரேஷ், மலர் வெங்கடேஷ், பாலமுருகன், பாலசுப்பிரமணி, கள்ளத் தெருகுமார், தாராநல்லூர் முருகன், ராஜேந்திரன், மகளிரணி அஞ்சு, பாலு, மன்சூர் அஹமது, துணைத் தலைவர் முஸ்தபா, அஸ்கர் ரியாஸ், மலைக்கோட்டை சேகர், அஸ்கர் அலி, இப்ராகிம் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனந்தன்