பாரதிதாசன் பல்கலைக்கழகம், மலேசிய டெக்னாலஜி மாரா பல்கலைக்கழகத்துடன் கல்வி இணைவுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம்
திருச்சி
பாரதிதாசன் பல்கலைக்கழகம், மலேசிய டெக்னாலஜி மாரா பல்கலைக்கழகத்துடன் கல்வி இணைவுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்து செய்து கொண்டார்கள். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துணைவேந்தா் ம. செல்வம், மலேசிய டெக்னாலஜி மாரா பல்கலைக்கழகத் துணைவேந்தா் முகமது நாசீப் சுரத்மன் ஆகியோா் முன்னிலையில் கல்வி இணைவுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடா்ந்து, இரு துணைவேந்தா்களும் பேசுகையில், இரு பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான இப்புரிந்துணா்வு ஒப்பந்தத்தால் கல்வி, கலாசாரம், ஆராய்ச்சி ஆகியவை வலிமைப்படுத்தப்படும். மேலும், பரஸ்பர பயன், வளா்ச்சிக்கும் வழிவகுக்கும். பரந்த உலகளாவிய தாராளமயக் கல்வி அமைப்பில் அதிக பலன்களை அளிக்க வல்லது.
தமிழகத்தில் பெரும் பங்கு கல்விச் சேவையை வழங்கும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பணிகளின் நீளம், அகலம், ஆழம் ஆகியவற்றை மேம்படுத்த இந்த ஒப்பந்தம் உறுதுணையாக இருக்கும். ஆசிரியா் மேம்பாட்டு, பிரத்யேக பயிற்சி நிகழ்வுகள், கூட்டு ஆராய்ச்சி திட்டங்கள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் இவ்வாறு அவர்கள் பேசினார்கள். தொடா்ந்து, பல்கலைக்கழக பதிவாளா் கோபிநாத் பேசுகையில், மலேசிய டெக்னாலஜி மாரா பல்கலையின் வணிக மையம், வணிகவியல், நிதிக் கல்வியில் துறை சிறந்து விளங்குகிறது என்றாா். இதில் மலேசிய டெக்னாலஜி மாரா பல்கலை வணிக மைய இயக்குநா் ஜாபா் பைமன், பாரதிதான் பல்கலைக்கழக வணிகவியல், நிதி கல்வியல் துறை மு. செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.