பழைய தேர்போகி சித்தி விநாயகர் ஸ்ரீ தேவி வில்வ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்.
இராமநாதபுரம்- ஆக.20,
இராமநாதபுரம் அருகே உள்ள பழைய தேர்போகி கிராமத்தில் அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலயம் மற்றும் ஸ்ரீ தேவி வில்வ முத்துமாரியம்மன் புரோணதாரன ஆலய ஜீர்னோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பழைய தேர்போகி கிராமத்தில் அமைந்துள்ள சித்தி விநாயகர், ஸ்ரீ தேவி வில்வ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு அனுக்ஞை ,விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் தொடங்கி மாலை 6 மணியளவில் மகாலெட்சுமி பூஜை, யாகசாலை பூஜை, ஹோமங்கள் நடந்தது.இரவு 9 மணியளவில் மருந்து சாத்துதல் உள்ளிட்டவை நடைபெற்று வெள்ளிக் கிழமை காலை 6.30 மணிக்கு மேல் கோபூஜை, சூர்ய நமஸ்காரம், யாகசாலை பூஜைகள் நடைபெற்று ரெகுநாதபுரம் சேஷய்யங்கார், தெய்வச்சிலை ஐய்யங்கார், மற்றும் திருநெல்வேலி முருகானந்த சிவாச்சாரியார் தலைமையிலான வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து சித்தி விநாயகர், ஸ்ரீ தேவி வில்வ முத்துமாரியம்மனுக்கு அபிஷேக அலங்காரம் நடைபெற்று அருட் பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடந்தது. இந்த நிகழ்வில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு மண்டபம் ஒன்றிய துணை பெருந்தலைவர் பகவதி லெட்சுமி முத்துக்குமார் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

திமுக செய்தி தொடர்பு துணை செயலாளர் ராஜீவ்காந்தி, மண்டபம் ஒன்றிய பெருந்தலைவர் சுப்புலெட்சுமி ஜீவானந்தம், இராமநாதபுரம் தெற்கு நகர் திமுக பொறுப்பாளர் பிரவீன் தங்கம், தேர்போகி ஊராட்சி மன்ற தலைவர் மோகன் குமார், புதுவலசை ஊராட்சி மன்ற தலைவர் மீரான் ஒலி, பெருங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கிராம தலைவர் வீரபத்திரன், மண்டபம் ஒன்றிய துணை பெருந்தலைவர் பகவதி லெட்சுமி முத்துக்குமார், அகில இந்திய மறவர் அறக்கட்டளை நிறுவன தலைவர் முருகேசன், கிராம துணை தலைவர் அரியமுத்து, இளைஞர் நற்பணி மன்ற தலைவர் அங்காளேஸ்வரன், பூசாரி காளிமுத்து, ஈஸ்வரன், உள்ளிட்ட கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். மேலும் விழாவில் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். எம்.சோமசுந்தரம்