நயினார்கோவில் வட்டாரத்தில் நீர்வள நிலவள திட்டப்பணிகள் .. கலெக்டர் சந்திரகலா ஆய்வு
இராமநாதபுரம், ஜுலை,23,
நயினார்கோவில் வட்டாரம் பாண்டியூர் கிராமத்தில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜெ.யு.சந்திரகலா ஆய்வு செய்தார்.
பாண்டியூர் கிராமத்தில் கோபால் என்பவர் வயலில் செழித்து வளர்ந்துள்ள தக்கைபூண்டு வயலினை ஆய்வு செய்த அவரிடம் “பசுந்தாள் உரம் -திருந்திய நெல் சாகுபடி -பயறு என்ற பயிர் திட்டத்தில் 41 உயர் விளைச்சல் செயல் விளக்க திடல் அமைக்க தலா ரூ 10,000 மானியம் வழங்கப்படுகிறது இத்திட்டம் நயினார்கோவில் வட்டாரம் கீழ் வைகை வடி நில பகுதியில் உள்ள கிராமங்களில் செயல்படுத்தப்படுகிறது.
நடப்பாண்டில் நயினார்கோவில் வட்டாரத்தில் திருந்திய நெல் சாகுபடியில் கேழ்வரகு குதிரைவாலி பயறு வகைகள் நிலக்கடலை ஆகிய பயிர்களில் 89 உயர் விளைச்சல் செயல்விளக்க திடல்கள் மானியத்தில் அமைக்கப்பட உள்ளது என்று வேளாண்மை இணை இயக்குனர் டாம் பி சைலஸ் விளக்கினார். மேலும் வயல்வெளி பள்ளி கோனா வீடர் கொண்டு களை எடுத்தல், மாதிரி கிராம செயல்பாடுகள் குறித்தும் விதை கிராம குழு செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். சென்ற ஆண்டு தக்கைப்பூண்டு சாகுபடி செய்தவர்கள் தொடர்ந்து இந்த ஆண்டும் சாகுபடி செய்தும் சென்ற ஆண்டில் சாகுபடி செய்ததை பார்த்து புதியதாக சாகுபடி செய்பவர்கள் பற்றியும் விளக்கப்பட்டது.
மண்வள அட்டை அடிப்படையிலான உரப் பரிந்துரை, வரிசை நடவு, விதைநேர்த்தி, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளை கடைபிடித்து அதிக உற்பத்தி திறன் மற்றும் நெல் சிறு தானியங்கள் பயறு வகைகள் ஆகிய உணவு தானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க கேட்டுக் கொண்டார். மேலும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்கபட்ட வயல் அதன் பயன்பாடு குறித்தும் ஆய்வு செய்தார். நடப்பாண்டில் 56 இலட்சம் நிதி இலக்கு நயினார் கோவில் வட்டாரத்தில் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து இரண்டு கோடி மதிப்பீட்டில் நயினார் கோவில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டட கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குனர் இராமநாதபுரம் டாம் பி சைலஸ் ,வேளாண்மை துணை இயக்குனர் மாநில திட்டம் சேக் அப்துல்லா ,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி, வேளாண்மை உதவி இயக்குனர் நயினார் கோவில் கே.வி.பானுபிரகாஷ், உதவி வேளாண்மை அலுவலர்கள் லாவண்யா, சீதாலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர். சோமசுந்தரம்
Attachments area