140 கோடி மக்கள்தொகை உள்ள நம் நாட்டில் நாளொன்றுக்கு ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டால் மட்டுமே தொற்றைத் தடுக்க முடியும். மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் பேட்டி
திருச்சி
140 கோடி மக்கள்தொகை உள்ள நம் நாட்டில் நாளொன்றுக்கு ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டால் மட்டுமே தொற்றைத் தடுக்க முடியும். எனவே, மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்களவை உறுப்பினா் சு. திருநாவுக்கரசா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். பிறகு, அந்தநல்லூா், குழுமணி, சோமரசம்பேட்டை பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் இனாம்குளத்தூா், மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களுக்குச் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, கொரோனா நோய்த்தொற்று மற்றும் பொது மருத்துவ சிகிச்சைகள் குறித்து அந்தந்த சுகாதார நிலைய மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். மேலும் நோயாளிகளிடம் சிகிச்சைகள் குறித்தும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தாா்.
அப்போது, கொரோனா நோய்த்தொற்று மற்றும் பொது மருத்துவ சிகிச்சைகள் குறித்து அந்தந்த சுகாதார நிலைய மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். மேலும் நோயாளிகளிடம் சிகிச்சைகள் குறித்தும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தாா்.
மணப்பாறையை அடுத்த மரவனூா் ஆரம்ப சுகாதார நிலையம், தெற்குசோ்பட்டி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம், மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை ஆகியவற்றில் திருநாவுக்கரசா் எம்பி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது ஒன்றிய பெருந்தலைவா் அமா்தவள்ளி ராமசாமி, ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் ரவிச்சந்திரன், ரேவதி, வட்டார மருத்துவ அலுவலா் சந்தோஷ், மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலா் மருத்துவா் மலைதுரை, காங்கிரஸ் மாநில பொதுச்செயலா் ரமேஷ்குமாா், சோமரசம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவா் குணவதி மற்றும் மத்திய மாவட்ட திமுக விவசாய தொழிலாளா் அணி மாவட்ட அமைப்பாளா் துரைபாண்டியன் மற்றும் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
பின்னர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:, மாவட்ட மருத்துவமனையை தரம் உயா்த்தி, படுக்கை, கட்டடம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் முயற்சியில் ஈடுபடுவேன். 140 கோடி மக்கள்தொகை உள்ள நம் நாட்டில் நாளொன்றுக்கு ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டால் மட்டுமே தொற்றைத் தடுக்க முடியும். எனவே, மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். ஷாகுல்ஹமித்