நம்புதாளை சிவன் கோவிலில் சனிப்பிரதோச வழிபாடு
தொண்டி, செப்.5-
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்புதாளையில் மிகவும் பிரசித்தி பெற்ற 13.ம் நூற்றாண்டைச் சேர்ந்த, சிவாலயம் உள்ளது. வாலி வழிபட்ட இச்சிவாலயத்தில் சனிப்பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிசேக, ஆராதனைகள் நடைபெற்றது.
பிரதோசங்களில் தினப் பிரதோசம், மாதப்பிரதோசம் என பல வகைகள் உள்ளது அதில் மாதத்தில் இருமுறை வரும் பிரதோசங்களில் சனிக்கிழமை வரும் பிரதோசம் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. மாலை 4:30 மணி முதல் 6 மணி வரை உள்ள இந்த பிரதோச நேரம் புனிதமாக கருதப்படுகிறது. இந்நேரத்தில் வழிபாடு நடத்தும் போது எந்த ஒரு மந்திரம் ஒரு முறை ஜெபித்தால் பல கோடி மடங்கு புண்ணியத்தை தரும் என்பதால், சிவபெருமானுக்கு உரிய வாகனமான நந்திதேவருக்கு பால்,பழம், பன்னீர், இளநீர்,சந்தனம், தேன், விபூதி ஆகியவற்றால் சிறப்பு அபிசேகங்கள் செய்கின்றனர். அதன்படி தொண்டி அருகே நம்புதாளை கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள ஸ்ரீ அன்னபூரணேஸ்வரி சமேத நம்பு ஈஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோச வழிபாடு நடைபெற்றது. பூஜை ஏற்பாடுகளை வாசு,தொண்டி, செப்.5-
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்புதாளை சிவன் கோவிலில் சனிப்பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிசேக, ஆராதனைகள் நடைபெற்றது. பிரதோசங்களில் தினப் பிரதோசம், மாதப்பிரதோசம் என பல வகைகள் உள்ளது அதில் மாதத்தில் இருமுறை வரும் பிரதோசங்களில் சனிக்கிழமை வரும் பிரதோசம் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. மாலை 4:30 மணி முதல் 6 மணி வரை உள்ள இந்த பிரதோச நேரம் புனிதமாக கருதப்படுகிறது. இந்நேரத்தில் வழிபாடு நடத்தும் போது எந்த ஒரு மந்திரம் ஒரு முறை ஜெபித்தால் பல கோடி மடங்கு புண்ணியத்தை தரும், துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்ற நம்பிக்கையில், சிவபெருமானுக்கு உரிய வாகனமான நந்திதேவருக்கு பால்,பழம், பன்னீர், இளநீர்,சந்தனம், தேன், விபூதி ஆகியவற்றால் சிறப்பு அபிசேகங்கள் செய்கின்றனர். அதன்படி தொண்டி அருகே நம்புதாளை கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள ஸ்ரீ அன்னபூரணேஸ்வரி சமேத நம்பு ஈஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோச வழிபாடு நடைபெற்றது. பூஜை ஏற்பாடுகளை வாசு, கருப்பசாமி ஆகியோர் செய்திருந்தனர். அப்போது மழை பெய்ததால் குறைந்த அளவு பக்கதர்களே மழையில் நனைந்தபடி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டனர்.பூஜை முடிவில் சர்க்கரை பொங்கல், கொண்டக்கடலை, பால் பிரசாதமாக வழங்கப்பட்டது.