நம்புதாளையில் புதிதாக உள் விளையாட்டு அரங்கம் இராமநாதபுர பாராளுமன்ற தொகுதி எம்.பி.நவாஸ்கனி திறந்து வைத்தார்
நம்புதாளை,ஜூலை.26
நம்புதாளையில் புதிதாக உள் விளையாட்டு அரங்கம் இராமநாதபுர பாராளுமன்ற தொகுதி எம்.பி.நவாஸ்கனி, இராமநாதபுரம் மற்றும் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ ஆகியோர் திறந்து வைத்தனர். இராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளையில் ரெயின்போ குரூப் நிறுவனத்தினரால் நிறுவப்பட்ட ரேலி ஸ்போர்ட்ஸ் என்ற இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கத்தை இராமநாதபுர பாராளுமன்ற எம்.பி நவாஸ்கனி, திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருமாணிக்கம், இராமநாதபுர தொகுதி எம்.எல்.ஏ காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் ஆகியோர் திறந்து வைத்தனர். முன்னதாக முன்னாள் செயல் அலுவலர் செய்யதலி அனைவரையும் வரவேற்று பேசினார். பொறியாளர் ஜமீல் கட்டிடம் உருவாக்கம் பற்றி பேசினார்.
இக்கால இளைஞர்களை நல்வழிப்படுத்தும் உயர்ந்த நோக்கத்தில், புத்தி கூர்மைக்கும், உடல் வலிமைக்கும் விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து விளையாட்டு அரங்கம் நிறுவியிருப்பது பெருமையளிப்பதாக இராமநாதபுர எம்.எல்.ஏ காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் புகழாரம் சூட்டினார். முன்னதாக கல்வெட்டை திறந்து வைத்தார்.
திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கரு.மாணிக்கம் பேசும் போது, இப்பகுதி இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக சாவதேச தரத்துடன் நிறுவப் பட்டுள்ள இந்த உள் விளையாட்டு அரங்கை திறப்பதற்காக பெருமைப்படுகிறேன் என்று கூறினார். மேலும் டேபிள் டென்னிஸ் அரங்கை திறந்து வைத்த தோடு, உள் விளையாட்டு அரங்கத்திற்குள் இறகு பந்து விளையாடி துவக்கி வைத்தார். உரிமையாளர்கள் ரஹ்மத்துல்லா உட்பட கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் கேக் பார்சல் வழங்கப்பட்டது. முடிவில் ரேலி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தைச்சேர்ந்த ஹிப்பத்துலா நன்றி கூறினார். சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்