நம்புதாளையில் காமராஜர் பிறந்த நாள் விழா!
இராமநாதபுரம், ஜூலை.15-இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கடலோர கிராமமான நம்புதாளையில் உள்ள திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் டாக்டர்.ஜான் தாமஸ் தலைமையில் பெருந்தலைவர் காமராஜரின் 119-ம் ஆண்டு பிறந்த நாள விழாவாக கொண்டாடப்பட்டது.
அனைத்து தெரு ஜமாஅத்தார்கள் கிராம தலைவர்கள் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சகாய மதியரசு அனைவரையும் வரவேற்று பேசினார்.
காமராஜரின் திரு உருவப்படத்திற்கு கலந்து கொண்டவர்கள் அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆசிரியை சுமதி நன்றி கூறினார்.
சிறப்பு செய்தியாளர்
வாசு.ஜெயந்தன்
இராமநாதபுரம்.