நம்புதாளையில் இளைஞர் தூக்கிலிட்டு தற்கொலை
இராமநாதபுரம், ஜூலை-8
இராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை கிழக்கு தெருவைச்சேர்ந்தவர் செய்யது முகமது மகன் சாஹிபு(26).இவருடைய தந்தை காலமாகி விட்டார். தாய் ஜேன்சா மற்றும் தம்பி ரபீக்(19). ஆகியோருடன் பழைய உதயம் திரையரங்கம் இருந்த பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் இவருக்கு திருமணம் செய்வது சம்பந்தமாக தாயுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட வந்த சாஹிபு மனமுடைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்த தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்தன் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்