நம்புதாளையில் ஆபத்தான நிலையில் உள்ள ஓட்டுக்கட்டிடத்திற்கு பதிலாக புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செய்யது யூசுப் அரசுக்கு கோரிக்கை
தொண்டி, ஆக.12-
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே திருவாடானை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட நம்புதாளையில் உள்ள தொடக்கப் பள்ளியில் 427 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த 2016-ம் ஆண்டு முதலே இப்பள்ளியில் மாணவ, மாணவிகளின் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மாணவ,மாணவிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி வகுப்பறைக் கட்டிடம் தேவை உள்ளது. 15 வகுப்பறை கட்டிடம் தேவை உள்ள நிலையில் 9 வகுப்பறை கட்டிடமே உள்ளது. இதில் பழுதடைந்த ஓட்டு கட்டிடமும் உள்ளது. பள்ளி ஆரம்பிக்கும் போது பழுதடைந்த ஓட்டுக் கட்டிடத்திலேயே பாடம் நடத்தும் நிலை உள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள ஓட்டுக்கட்டிடத்திற்கு பதிலாக புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செய்யது யூசுப் அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளார்.
இது சம்பந்தமாக பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கூறும்போது, கொரோனா தடுப்பு காலக்க
ட்டத்தில் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளியிலேயே மாணவ, மாணவிகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் ஆண்டுதோறும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாகிறது. ஆனால் அதற்குரிய கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கடலோர கிராமமான நம்புதாளையில் தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன் என்றார். சிறப்பு செய்தியாளர் வாசு. ஜெயந்தன்
