நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை தரக்குறைவாக பேசிய யோயக்குடில் சிவக்குமாரை துரிதமாக செயல்பட்டு கைது செய்த காவல்துறைக்கு நன்றி
திருச்சி மாவட்டத்தில் வட்டார ரீதியாக உலமாக்கள் மற்றும் உமராக்கள் கலந்தாய்வு கூட்டம் நடத்துவது என்றும், இது சம்பந்தமாக மாநில ஜமாஅத்துல் உலமா சபை முடிவு எடுக்கும் வழிகாட்டுதல்களை நமது மாவட்டத்தில் நடைமுறைபடுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது என்று திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருச்சி மாநகர மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் செயற்குழு கூட்டம் 21.09.2021, செவ்வாய்கிழமை,ன திருச்சி காஜா நகர், ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி மாநகர மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மெளலானா முஃப்தி ரூஹுல் ஹக் ரஷாதி காஸிமி ஹழ்ரத் கிப்லா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், திருச்சி மாவட்டத்தின் 12- வட்டார பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில் திருச்சி மாநகர மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் திட்டங்கள் குறித்தும் அதன் வளர்ச்சி பணிகள், மஹல்லா தோறும் நடத்த வேண்டிய பணிகள் குறித்து நிர்வாகிகள் பேசினார்கள். பின்னர் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. கூட்டத்தில் சமீபத்தில் வஃபாத்தானவர்களுக்காகவும், மேலும்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் ஸிஹ்ஹத் – ஸலாமத்திற்காக துஆ செய்யப்படடது. பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது விபரம் வருமாறு :
இஸ்லாமிய இளைஞர்களுக்கான தர்பியா நிகழ்ச்சியை இதுவரை நடத்தாமல் இருந்த வட்டாரங்களில் வெகு விரைவில் இளைஞர்களை ஒன்று திரட்டி தர்பியா நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
வட்டார ரீதியாக உலமாக்கள் மற்றும் உமராக்கள் கலந்தாய்வு கூட்டம் நடத்துவது என்றும், இது சம்பந்தமாக மாநில ஜமாஅத்துல் உலமா சபை முடிவு எடுக்கும் வழிகாட்டுதல்களை நமது மாவட்டத்தில் நடைமுறைபடுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து மஸ்ஜிதின் நிர்வாகிகளின் பெயர் மற்றும் அவர்களது பொபைல் நம்பர் ஆகியவை 21.09.2021 முதல் 21.10.2021 ஒரு மாதத்திற்குள் திரட்டி முறைப்படுத்தி மாவட்ட நிர்வாகத்தினரிடம் ஒப்படைப்பதற்காக மவ்லவி அப்துல் காதிர் இல்ஹாமி ஹாத்யாவுடன் நியமிப்பது என்று ஏகாமனதாக முடிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு உதவியாக மவ்லவி ஷஃபீ அஹமது தாவூதி, மவ்லவி ஃபஜல் அன்வாரி ஆகியோரை நியமிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
முந்தைய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் ஆம்புலன்ஸ் வாகனம் வாங்குவதற்காக வட்டார பொறுப்புதாரிகள் தங்கள் வட்டாரத்தில் அதற்குரிய நிதியை திரட்டி தரவேண்டும் என்று குறைந்தபட்சம் ஒவ்வொரு வட்டாரமும் ரூ. 50 ஆயிரம் நிதியை விரைவாக வசூல் செய்து என்று முடிவு செய்யப்பட்டது. தேவையான நிதி சேர்ந்து விட்டால் எதிர்வரும் ரபீஉல் அவ்வல் பிறை 12ல் ஆம்புலன்ஸ் வாகனம் வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஜமாஅத்துல் உலமா சபையின் கீழ் அமைக்கப்படும் பொது சேவைக்குழுவிற்கு பொறுப்பாளராக மவ்லவி ஜாகீர் ஹுசைன் இல்ஹாமி தலைமையில் மவ்லவி அல் ஆமீன் யூசுபி, மவ்லவி அப்துல் மன்னான் அன்வாரி ஆகியோர் மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் சேவைக்குழுவிற்கு தேவைச செயல்திட்டங்கள், செயல்முறைகள் அனைத்தும் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்ட பொருளாளர் ஆகியோருடன் கலந்து ஆலோசனை செய்து நடைமுறைப்படுத்த இந்த செயற்குழு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் மக்தப் மதரஸாக்கள் சிறப்பாக நடைபெறுவதற்கு ஆய்வு செய்வது, ஆலோசனை வழங்க உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை செய்வதற்கு மவ்லவி முஹம்மது பஸீம் தாவூதி தலைமையில் மவ்லவி அஸதுல்லாஹ் யூசுபி, மவ்லவி ஃபழ்லுல்லாஹ் ஹஸனி, மவ்லவி சைஃபுல்லாஹ் இஹ்யாயி ஆகியோர் நான்கு பேர் கொண்ட குழுவை நியமிக்கப்படுகிறது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தென்னூர், ஆழ்வார்தோப்பு ஆகிய பகுதியிலுள்ள ஆறு பள்ளிவாசல்களில் உள்ள நிர்வாகிகளை ஒரிடத்தில் ஒன்று கூட்டிஅவர்களுக்கு மக்தப் மதரஸாக்கள் பற்றி அவசியத்தையும், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் தர்பியா நிகழ்ச்சியின் அவசியத்தை பற்றி எடுத்துச் சொல்வதற்காக தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில பொருளாளர் மவ்லவி முஹம்மது மீரான் மிஸ்பாஹி தலைமையில் மவ்லவி இன்ஆமூல் ஹஸன் காஷிஃபி, மவ்லவி சிராஜுதின் மன்பயீ, மவ்லவி ஜாகீர் ஹூஸைன் இல்ஹாமி, மவ்லவி அல்ஆமீன் யூசுஃபி, மவ்லவி அப்துல் மன்னான் அன்வாரி, மவ்லவி முஹம்மது நிஸார் பாகவி ஆகிய ஏழு பேர்கள் கொண்ட குழுவை நியமித்து இவர்கள் மேலும் மேற்கூரிய பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் திருச்சி மாவட்ட தலைவர் மவ்லவி முப்ஃதி முஹம்மது ரூஹூல் ஹக் அவர்களிடம் உபதேசம் செய்வார்கள் என்று முடிவு செய்துள்ளது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அவர்களை தரக்குறைவாக பேசிய யோயக்குடில் சிவக்குமார் என்பவரை துரிதமாக செயல்பட்டு கைது செய்த காவல்துறைக்கு நன்றி தெரிவிப்பதோடு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் இக் செயற்குழு கேட்டு கொள்கிறது. மேலும் இதுபோன்ற விஷயங்களுக்கு காவல்துறை மற்றும் அதிகாரிகளை சந்திப்பதற்கு திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளர் மவ்லவி இன்ஆமூல் ஹஸன் காஷிஃபி தலைமையில் ஏழு பேர்கள் கொண்ட குழுவை காவல்துறை கமிஷனரிடம் மனு கொடுப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ளது இவ்வாறு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் ஏழு வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.