தொண்டி முதல் நிலை பேருராட்சி சார்பில் 75.ம் ஆண்டு சுதந்திர தினம் கொண்டாட்டம்
தொண்டி, ஆக.16-
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலை பேருராட்சியில் கடற்கரைப் பகுதியான சந்தன மாரியம்மன் கோவில் பகுதி மழைநீர் தேங்கும் பகுதியாக சுகாதாரமற்ற நிலையில் இருந்தது. இப்பகுதியை பார்வையிட்ட செயல் அலுவலர் மகாலிங்கம் ஜே.சி.பி இயந்திரம் உதவியுடன் முட்செடிகளை அகற்றி சுத்தப்படுத்தி, அப்பகுதியில் 75.ம் ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடும் வகையில் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில், மா. பலா. நெல்லி போன்ற பலன் தரும் பழவகை மரக்கன்றுகளை பாதுகாப்பு கம்பி வேலியுடன் நட்டார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், ஊன்றப்படும் பழச்செடிகளை ஆடு,மாடுகள் உண்ணாமல், தண்ணீர் ஊற்றி பராமரிப்பதாக தெரிவித்தனர்.
சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்