தொண்டி முதல் நிலைப் பேருராட்சி சார்பாக கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
தொண்டி, ஆக.7-
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி முதல் நிலைப் பேருராட்சி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் பெரிய பள்ளிவாசல் எதிரே மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி வட்டாட்சியர் மேற்பார்வையில் திருவாடானை மண்டல துணை வட்டாட்சியர் சேதுராமன் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் மகாலிங்கம், தொண்டி வருவாய் ஆய்வாளர் அமுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் கொரோனா மூன்றாவது அலை பரவாமல் தடுப்பது சம்பந்தமாக கரகாட்டம், ஒயிலாட்டம் பாட்டு, நாடகம் மூலம் கலைக்குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் கோவிந்தராஜ் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், வருவாய்துறையினர் கலந்துகொண்டனர். முடிவில் தொண்டி வி. ஏ. ஒ.ராஜேஷ் நன்றி கூறினார். சிறப்பு செய்தியாளர் வாசு. ஜெயந்தன்