தொண்டி பகுதியில் நள்ளிரவில் மன நிலை பாதித்தவர்களை இறக்கி விட்டு சென்றுவிடுகின்றனர். இவர்கள் அரை, குறை ஆடையுடன் டீக்கடைகளில் டீ குடித்துவிட்டு திரிகின்றனர்.
தொண்டி, ஆக.6-
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியானது பட்டுக்கோட்டை, வேளாங்கண்ணியிலிருந்து, ஏர்வாடி, இராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையின் மையப்பகுதியாக உள்ளது மேலும் இவ்வழியாக கேரள அருகே களியாக்காவிளை போன்ற பகுதிக்கும் இவ்வழியாக அரசு மற்றும் தனியார் சுற்றுலா வாகனங்கள் பயணிக்கிறது. இந்நிலையில் மையப்பகுதியாக இருக்கும் தொண்டி பகுதியில் நள்ளிரவில் மன நிலை பாதித்தவர்களை இறக்கி விட்டு சென்றுவிடுகின்றனர். இவர்கள் அரை, குறை ஆடையுடன் டீக்கடைகளில் டீ குடித்துவிட்டு திரிகின்றனர். 

இவ்வாறு இருக்க தொண்டியில் கடந்த 3 தினங்களாக உடலில் ஒட்டுத் துணி இல்லாமல் நிர்வாணமாக மனநிலை பாதித்த ஒருவர் இங்கும் அங்குமாக ஓடித்திரிந்தார். இது பார்ப்பவர்களை முகம் சுழிக்கும் நிலை இருந்தது. பிடிக்கச் சென்றால் காட்டுக் கருவேல செடி, கடற்கரை பகுதி என மறைவான இடம் நாேக்கி மறைந்து காெள்வதுமாக இருந்தார். இதனைக் கண்ட வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின் நிறுவனர் பாரிஸ், பொதுச்செயலாளர் வாசு.ஜெயந்தன் ஆகியோர் திருவாடானை டி.எஸ்.பி உத்தரவின்பேரில் தொண்டி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் கேட்டுக்கொண்டதன்படி சகோதரர்கள் உதவியுடன் பிடித்து உடை அணிவித்து இராமநாதபுரம் மன நல காப்பகத்தில் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இச்செயலை பலரும் பாராட்டினர். சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்