தொண்டி அருகே மச்சூர் கிராமத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி
இராமநாதபுரம் மாவட்டம்,ஜுலை-9,
தொண்டி அருகே மச்சூர் கிராமத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி கவுன்சிலர் ராஜாராம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் 16 குழுக்கள் கலந்து கொண்டது.தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்ற போட்டியில் முதல் பரிசை அடுத்தகுடி ஏ.சி.சி அணி வென்றது.இரண்டாம் பரிசை தொண்டி மஹா சக்திபுரம் அணியும் மூன்றாம் பரிசை எஸ்.பி.பட்டிணம் அணியும்,நான்காம் பரிசை மச்சூர் கிராம அணியும் வென்றது.சமூக இடைவெளியுடன் நடைபெற்ற போட்டியில் பலர் கலந்து கொண்டனர். சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்